பொண்டாட்டி என்ன திட்டுறா.. மனைவி குறித்து புலம்பித் தள்ளும் பிரபல இயக்குனர்.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவர் 2002 ஆம் ஆண்டு ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தில் எழுத்தாளராகவும் ,இயக்குனராகவும் தமிழ் சீனிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ,யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன்,மயக்கம் என்ன ,இரண்டாம் உலகம் நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.  இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘பரசுராமன்’ படத்தில்  பீமா ராசி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

   

இவர் நடிகர் ,பாடல் ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டு தமிழ்  சினிமாவில் வலம் வருகிறார்.இயக்குனர் செல்வராகவன் சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார்.அதன்  பிறகு இருவரும்  கருத்து வேறு பாடு  காரணமாக 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  மூன்று குழந்தைகள் உள்ளனர்.தற்போது செல்வராகவன் தற்போது ‘7ஜி ரெயின்போ காலனி 2’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ராயன்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சமீபகாலமாக சோசியல் மீடியாவில்  தனது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளிட்டுள்ளார்.அதில் “நீ இருந்தும் உன் கூட இருக்க முடியல, நீ இல்லாமலும் என்னால இருக்க முடியல, நான் என்ன பண்றது என்று எனக்கு தெரியல, ஏன்னா நீ என்னை திட்டிக்கிட்டே இருக்க, நிறுத்து” என்று செல்லமாக சண்டை போட்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)