இனிமே அந்த கேள்வியை யாராவது கேப்பீங்க..? சிம்புவை கோர்த்துவிட்ட பிரேம்ஜி.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!

பொதுவாக திரை துறையில் பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகள் 30-35 வயதிற்கு மேல் தான் திருமணம் செய்து கொள்வார்கள். திரை உலகில் முடிந்த அளவிற்கு பெயர், புகழ், பணம் சம்பாதித்த பிறகு நடிகைகள் தொழிலதிபரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுவார்கள். நடிகர்கள் 35 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்வார்கள்.

எனினும், சிம்பு, விஷால், பிரேம்ஜி போன்றோர் 40 வயதை கடந்தும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். குறிப்பாக சிம்புவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் திருமணம் எப்போது? என்ற கேள்வி அவரை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் அவரை கலாய்த்து அவ்வபோது மீம்ஸ்களும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

   

அதேபோல், நடிகர் பிரேம்ஜியும் 40 வயதை கடந்து திருமணம் செய்யாமல் இருந்தார். இந்நிலையில், அவருக்கு இந்த வருடத்தில் திருமணம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், சிம்பு பேசிய பழைய வீடியோ ஒன்றில் அவரை டேக் செய்து மாட்டிவிட்டுள்ளார்  பிரேம்ஜி.

அதாவது, பழைய பேட்டி ஒன்றில் எப்போது கல்யாணம் என்ற கேள்விக்கு சிம்பு, “சும்மா கல்யாணம் பண்ணு, உன் வயசுல இருக்கறவங்க எல்லாம் கல்யாணம் பண்ணிட்டாங்களேன்னு சொல்றாங்க. பதிலுக்கு நானும் உங்க வயசுல இருக்கறவங்க எல்லாம் போய் சேர்ந்துட்டாங்களே? நீங்க எப்போ போக போறீங்கன்னு? கேட்டா நல்லாவா இருக்கும்” என கூறி இருக்கிறார்.

அந்த வீடியோவை ரசிகர்கள் ஒருவர் ஷேர் செய்ய, அதை பார்த்த பிரேம்ஜி சிரிக்கும் ஸ்மைலிகளை போட்டு, சிம்புவின் ஐடியையும் டேக் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இப்படி எல்லாம் கலாய்த்து கொண்டிருந்தால், எப்போதுமே உங்களுக்கு திருமணம் ஆகாது என்று கேலி செய்து வருகிறார்கள்.