நடிகர் கமலஹாசன் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் என்ன வேலை பார்த்திருக்கிறார் தெரியுமா?..  வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான  நடிகர்கள்  நண்பர்களாக கூட இருந்துள்ளனர் . தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி எப்படியோ அவர்களுக்குப் பின்னர் ரஜினி கமல் என மாறியது.  அபூர்வராகங்கள் படத்தில் ரஜினி ஒரு சின்ன வேடத்தில் அறிமுகமானபோது கமல் பெரிய ஸ்டார் ஆக இருந்தார். எனவே கமலுடன் நடித்த நாமும் பிரபலமாகலாம் என்ற நினைத்தே அவருடன் பல படங்களிலும் ரஜினி இணைந்து நடித்துள்ளார்.

   

ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் தனியாக பயணிப்போம் என முடிவு செய்து வெவ்வேறு பாதையில் சென்றனர். ரஜினியும் கமலும் மாறி மாறி ஹிட் கொடு கொடுத்தனர். ஆனால் ரஜினி படங்கள் அதிக வசூலை பெற்று அவரை சூப்பர் ஸ்டார் ஆக மாற்றியது. ரஜினியும் கமலும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தொழில் போட்டி  இப்போது வரை அது தொடர்கிறது.கமல்ஹாசன் மீது எப்போதும் உயர்ந்த எண்ணத்தையும், மதிப்பையும், மரியாதையும், அன்பையும் வைத்திருப்பவர் ரஜினி.

பல சினிமா மேடைகளில் அதை பார்க்க முடியும். கமல்ஹாசனே சிறந்த நடிகர் என பல மேடைகளில் ரஜினியே பாராட்டியிருக்கிறார். கமலின் படங்களை பார்த்து எப்போதும் வியக்கும் நபராகவே ரஜினி இப்போது வரை இருக்கிறார்.ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும் ரஜினி கமல் ரசிகராகத்தான் இருக்கிறார். ஆனால், இது ரஜினி – கமல் ரசிகர்களுக்கு புரியாமல் சமூகவலைத்தளங்களில் சண்டை போட்டு வருகின்றனர்.

ஒரு மேடையில் ‘சினிமாவில் நானும்,ரஜினியும் நட்பாக இருப்பது போல வேறு நடிகர்களை பார்க்க முடியாது. ரஜினி பேசுவது போல எவனும் பேசமாட்டான்’ என பேசியவர் கமல்.லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விக்ரம் எனும் மெகா ஹிட்டை கமல் கொடுத்தால், நெல்சனை வைத்து ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை ரஜினி கொடுத்துள்ளார். எனவே, ரஜினி – கமல் போட்டி என்பது இப்போதும் திரையுலகில் தொடந்து வருகிறது. ஆனாலும், இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

1978 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் வாணி கணபதிஎன்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதுதான் கமலின் முதல் திருமணம். அந்த திருமணத்தில் ரஜினியும் கலந்து கொண்டார். அதோடு, அந்த திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாகவும் கமலுக்கு ரஜினி இருந்துள்ளார். தற்போது, அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.