சிறு வயதில் புகைப்படத்தில் கொழுக்கு முழுக்கு என்று… கியூட்டாக இருக்கும் நடிகை யார் தெரியுமா?…

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் தந்தை பிரகாஷ் படுகோன் ஒரு பேட்மிட்டன் வீரனும் கூட. நடிகை தீபிகா படுகோன் இளம் வயதில் தேசிய அளவிலான பூப்பந்து விளையாட்டில் விளையாடினார்.அதன்  பிறகு தனது பேஷனுக்காக  விளையாட்டை விட்டு விட்டு மாடலாக தனது பயணத்தை தொடங்கினார்.

   

அதை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘ஐஸ்வர்யா’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் கன்னடம் மற்றும் ஹிந்தியில் பல படங்களில் நடித்து   முன்னணி  ஹீரோயினாக வலம் வருகிறார்.இவர் நடிப்பில சமீபத்தில்  வெளியான படம் ‘ஜவான்’.இதை தொடர்ந்து அடுத்ததாக Fighter திரைப்படம் வெளிவரவுள்ளது.

சமீப காலமாக சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது. அதே போன்று  தீபிகா படுகோன்  சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றனர். இதை பார்த்து ரசிகர்கள் இந்த குழந்தை நடிகை  தீபிகா படுகோனா என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.