‘எதிர்நீச்சல்’ சீரியல் அருணின் அம்மா யார் தெரியுமா?… என்னது அவரும் ஒரு பிரபல நடிகையா?…

எதிர்நீச்சல் பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் விஷயங்களை சீரியல் மூலம் புட்டுபுட்டு வைக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். அதேசமயம் எப்படி இருக்க கூடாது, எதிர்த்து எப்படி போராட வேண்டும் என்பதையும் காட்டி மக்களை எதிர்நீச்சல் சீரியல் குழு கவர்ந்துவிட்டனர். அந்த தொடரில் அண்மையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் என்ற பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகின.

   

ஆனால் இயக்குனரின் முடிவை ரசிகர்கள் ஏற்கவில்லை. ஆதிரைக்கு கரிகாலனுடன் திருமணம் முடிந்துவிட்டது. இந்த சீரியலில் அருண் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சாணக்கியா.நடிகர் சாணக்கியன் எதிர்நீச்சல் சீரியலுக்கு வருவதற்கு முன்பே பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி சீரியலில் கோபியின் மகன் கேரக்டரில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதைத் தொடர்ந்து வெள்ளி திரையில் பல நடிகர்களின் குழந்தை நட்சத்திரங்களாகவும் நடித்திருக்கிறார். அவள் பெயர் தமிழரசி, பரமசிவன்,  வியாபாரி போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியுள்ளார்.

தற்பொழுது இவரின் பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது இவரது அம்மாவான கீதா சரஸ்வதி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிரியமான தோழி’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் வெள்ளி திரையிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு நடிகர் சாணக்கியனின் அப்பாவும் மலையாள நடிகராக தான் இருக்கிறாராம்.