மறைந்த தனது மனைவியின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜயகுமார்… கமெண்ட்களில் அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில், எம்.ஜி.ஆர், சிவாஜி, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர், மறைந்த பழம்பெரும் நடிகை மஞ்சுளா. 1970 ஆம் ஆண்டு நடிகர் ஜெமினி கணேசன் நடித்த ‘சாந்தி நிலையம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், தன்னுடைய இரண்டாவது தமிழ் படத்திலேயே எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்ஷகாரன்’ படத்தின் கதாநாயகியாக மாறினார்.

   

இதை தொடர்ந்து, சதி லீலாவதி, இதய வீணை, மறுபிறவி, உலகம் சுற்றும் வாலிபன், நினைத்ததை முடிப்பேன், அன்பே ஆருயிரே, மன்னவன் வந்தானடி, என சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக இருந்த போதே, 1976 ஆம் ஆண்டு நடிகர் விஜயகுமாரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே முத்து கண்ணு என்கிற முதல் மனைவி இருந்த நிலையில், மனைவியின் சம்மதத்தோடு மஞ்சுளாவையும் மனம் முடித்தார். திருமணத்திற்கு பிறகு இருவரும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

நடிகர் விஜயகுமாருக்கு முதல் மனைவி மூலம் அருண் விஜய் என்கிற மகனும், கவிதா, அனிதா ஆகிய இரு மகளும் உள்ளனர். அதே போல் இரண்டாவது மனைவியான மஞ்சுளா மூலம், வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். வனிதாவை தவிர மகன், மகள் என அனைவரிடமும் இணக்கமாக உள்ளார் என்பதும், வனிதாவை மீடியாவின் முன்பே தனக்கு அப்படி ஒரு மகள் இல்லை என கூறினார் என்பதை அனைவரும் அறிவோம்.

தற்பொழுது நடிகர் விஜயகுமார் மறைந்த தனது மனைவி மஞ்சுளாவின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் தங்களது அஞ்சலியை கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.