ஆண் குழந்தைக்கு தாயான சிம்பு பட நடிகை… அவரே வெளியிட்ட பதிவு… வாழ்த்துக்கள் கூறும்  ரசிர்கர்கள்…

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் 2008 ல் வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சனா கான். இவர் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். 2005 ல் ஹிந்தியில் முதன்முதலாக இவர் அறிமுகமானார். மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை சனா கான், முதலில் தனது தொழில் வாழ்க்கையை விளம்பர படங்களில் நடித்து  தொடங்கினார்.

   

பின்னர் திரைத்துறைக்கு வந்த இவர், தென்னிந்திய திரைப்படங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சிலம்பாட்டம் திரைப்படத்திற்கு பிறகு பரத் நடிப்பில் வெளியான தம்பிக்கு எந்த ஒரு, பயணம், ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து கலக்கியவர்.

2020ல்  பஃப்டி அனால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சினிமாவிற்கு குட் பாய் சொல்லிவிட்டு தனது கணவருடன் செட்டில் ஆகிவிட்டார். இவர் இறுதியாக ஹிந்தியில் விழுந்த Special OPS எனும் வெப் சீரிஸ் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார் நடிகை சனா கான். தற்போது கர்ப்பமாக இருந்த சனா கானுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது குறித்து அவரே தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து நடிகை சனா கானுக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும்  தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Saiyad Sana Khan (@sanakhaan21)