தமிழ் திரையுலகில் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மனோபாலா. ஒல்லிக்குச்சி தேகத்தில் அவர் செய்யும் காமெடிகள் கிச்சு, கிச்சு மூட்டுபவை.
சினிமா இயக்குனராகவும் சில ஹிட் படங்களைக் கொடுத்திருக்கும் மனோபாலா இப்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியலிலும் நடித்து வருகிறார்.
மனோபாலா என்றாலே கலகலப்பு படத்தில் வரும் நகைச்சுவைதான் நமக்கு நினைவுக்கு வருகிறது அந்த அளவுக்கு அதில் கலக்கியிருப்பார். எப்போதுமே சோசியல் மீடியாக்களிலும் மனோபாலா மிகவும் ஆக்டிவாக இருப்பார் இந்நிலையில் சமீபத்தில் மனோபாலா ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்து பதிவிட்டார். அந்தப் புகைப்படத்தில் மிகவும் டயர்டாக சோர்ந்து இருந்தார் மனோபாலா.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் மனோபாலாவின் உடல்நிலைக் குறித்து அனுதாபம் தெரிவித்து கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர். இதைப் பார்த்து, ‘என் அன்பு மக்களே..நான் ஏதோ ஒரு போட்டோவை போட அது இந்த லெவலுக்கு போகும்ன்னு தெரியல. நான் நல்லாத்தான் இருக்கேன். ஒண்ணுமில்லை. அன்புகாட்டிய(அப்படித்தான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்!’’எனப் பதிவிட்டுள்ளார்.