தமிழ் சினிமாவில் தனி ஒரு ஆளாக எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் மக்களிடையே இன்று அல்டிமேட் ஸ்டாராக இருக்கும் ஒரே நடிகர் தல அஜித் மட்டுமே. தற்போது தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் முன்னணி நடிகர் தல அஜித். அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.
இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கிவர, போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் உள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் First லுக் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.
திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கும் பலரும் தங்களது சொந்த வீட்டை பல கோடி கணக்கில் தான் கட்டியுள்ளனர். அந்த வகையில் தல அஜித் தனது சொந்த வீட்டை சுமார் ரூ. 140 கோடி கணக்கில் செலவு செய்து கட்டியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.