பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் 11 போட்டியாளர்கள் இவர்கள் தானா? வெளியான லிஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிகழ்ச்சிகளில் மிக பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. நான்கு சீசன்களை கடந்து தற்போது 5வது சீசனை தொடங்குவதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளது. மேலும், இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கொரோனாவால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறாததால் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை கூடுதல் கவனத்துடன் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், போட்டியாளர்களும் சலிக்க வைக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம்.

   

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான் இதுவரை வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலேயே அதிகமான பார்வையாளர்களை பெற்ற சீசனாக இருந்தது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது சிறு தவறு செய்தால் கூட தங்களுடைய கேரியரை பாதித்து விடும் என்பதையும் தெளிவாக உணர்ந்து பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தற்போது கிட்டத்தட்ட 10 பிரபலங்களிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

மேலும் கடைசி நேரத்தில் இவர்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அது இருக்கக் கூடும். அவர்களின் லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. லட்சுமி ராமகிருஷ்ணன், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா, கவர்ச்சிப் புயல் ஸ்ரீ ரெட்டி, குக் வித் கோமாளி அஸ்வின், குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, ராதாரவி, குக் வித் கோமாளி பவித்ரா, பழ கருப்பையா, கவர்ச்சி கன்னி சோனா, விஜய் டிவி சீரியல் நடிகர் ஆசீம், டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து.