மழை காலத்தில் வைரம் வெளிவரும் – விவசாய நிலத்தில் ஊண் உறக்கத்தை மறந்து தேடும் பொதுமக்கள்..! எங்கு தெரியுமா..?

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் விளைநிலங்களில் வைரக்கற்கள் கிடைப்பதாக பல ஆண்டுகளாக உள்ள வதந்தியை நம்பி இந்த ஆண்டும் மக்கள் அங்கு வைரம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், உள்ளிட்ட கிராமங்களில் வயல் பகுதிகளில் மழைக்கு பின்னர் வைரக்கற்கள் தானாகவே வெளியே வரும் என அப்பகுதி மக்கள் நம்புவதாக கூறப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு விவசாயி ஒருவர் தனது நிலத்தில் கிடைத்த 30 காரட் வைரத்தை ஒரு கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டார் எனக் கூறி வீடியோவும் சமூக வலைதலங்களில் வைரலானது.

கண்ணாடி போன்று ஜொலிக்கும் சிறு சிறு கற்கள் அங்கு கிடைப்பது உண்மைதான் என்றும் ஆனால் அவை வைரங்கள்தான் என்று உறுதியாகக் கூறமுடியாது என்றும் அப்பகுதியினர் சிலர் கூறுகின்றனர்.

அது வைரக்கற்கள் இல்லை, வதந்தியை நம்ப வேண்டாம் என பலமுறை போலீசார் எடுத்துக் கூறியும் கொளுத்தும் வெயிலில் பரந்து விரிந்த வயல் பரப்பில் வைரத்துக்கான தேடல் அங்கு நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.