மாடர்ன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்-முல்லை! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல்களை மிகவும் பிரபலம். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கென்று ஓர் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக ஒளிபரப்பபட்டு வருகிறது. இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகின்றனர்.

   

சமீபத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்டார். இதனால் தற்போது இதில் மிகவும் முக்கியமான முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகை காவ்யா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்போது மெகா சங்கமம் நடந்து வருகிறது. பாக்கியலட்சுமி சீரியல் குழுவினருடன் சங்கமம் நடந்துள்ளது. கடந்த சில நாட்களாக அப்படி தான் கதை ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த சங்கமம் கொஞ்சம் போர் அடிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வாரத்துடன் இந்த மெகா சங்கமம் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர்-முல்லை வேடத்தில் நடிக்கும் குமரன், காவ்யா படப்பிடிப்பை தாண்டி மாடர்ன் உடையில் ஒரு புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.