மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட பேனா யாருடையது? வெளியான சுவாரசியமான உண்மை

நேற்றைய தினத்தில் தமிகழத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர் கையெழுத்திட்ட பேனா குறித்து சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பின்பு திமுக அரியணை ஏறியுள்ள நிலையில், அதிலும் ஸ்டாலின் முதன்முறையாக முதல்வர் அரியணையில் அமர்ந்தது ஒட்டுமொத்த மக்களையும் நெகிழ வைத்தது.

   

அதிலும் அவரது குடும்பத்தினர், குறிப்பாக ஸ்டாலினின் மனைவி மற்றும் மகன் உதயநிதி, நிகழ்ச்சியில் கண்கலங்கினார்கள்.

இந்நிலையில் நேற்று பதவியேற்ற ஸ்டாலின் அதிரடியாக 5 கையெழுத்துக்களை போட்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது தமிழக மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் அவர் கையெழுத்திடும் போது அவர் பயன்படுத்திய பேனா பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த பேனா மறைந்த தி.மு.க.தலைவர் கலைஞர் கருணாநிதி பயன்படுத்திய பேனா என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தொண்டர் ஒருவர் பதிவிட்ட முகநூல் பதிவு தீயாய் பரவி வருகின்றது.