ரெண்டு வருஷமா கெடைக்காத சந்தோசம்… ஐபிஎல்-ல இப்போ தான் கெடச்சிருக்கு.. காவ்யா மாறன் ஹேப்பி அண்ணாச்சி…!

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான கலாநிதி மாறனின் மகள் காவியா மாறனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருக்காகவே ஹைதராபாத் அணியின் போட்டியை காண்பவர்கள் பலர். அந்த வகையில் ஹைதராபாத் அணி தோல்வியடைந்தால் சோகமாக அவர் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் மீம்ஸ்களில் வைரல் ஆகிவிடும்.

   

மேலும் வெற்றி பெற்றால் அவரின் மகிழ்ச்சியான முகம் இணையதளங்களில் வைரலாகும். எனவே, அவருக்காகவே பல ரசிகர்கள் ஹைதராபாத் அணி வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பதுண்டு. எனினும் சமீப வருடங்களாக ஹைதராபாத் அணி ஐபிஎல் போட்டிகளில் சொதப்பி கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் சவுத் ஆப்பிரிக்காவில் நடந்த SA-20 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்ட் அண்ட் கேப் அணி, சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கிறது. இதனால் உற்சாகத்தில் இருக்கும் காவியா மாறனின் வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.