’26 வயது தான் ஆகிறது’…. ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கிவிழுந்த உதவி இயக்குனர் மரணம்…. சோகத்தில் நடிகர் சாந்தனு வெளியிட்ட பதிவு

இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா வேலை செய்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் பாக்கியராஜ். இவரின் மகன் தான் நடிகர் சாந்தனு. இவர் தற்போது ராவணக் கோட்டம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தற்பொழுது உதவி இயக்குனரும் தனது நண்பருமான ராமகிருஷ்ணா மரணம் அடைந்ததாக இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

   

இளம் உதவி இயக்குனரான ராமகிருஷ்ணா எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல நபர் என்றும், தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் நடிகர் சாந்தனு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும் வாழ்க்கை நிலை இல்லாத ஒன்று என்றும் கடைசி நேரத்தில் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணா எனக்கு போன் பண்ணியும் என்னால் எடுக்க முடியவில்லை என்று நினைக்கும் போது மனம் வேதனை அளிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் ராமகிருஷ்ணாவிற்கு வெறும் 26 வயது தான் ஆகிறது என்றும், அவர் தனது உயிர் நண்பன் என்றும் சந்தனு பதிவிட்டுள்ள இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வேதனையை அளித்து வருகிறது. இந்த பதிவில் நடிகர் சாந்தனு தனது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம் தான் இந்த உலகத்தில் இப்போதைக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்று குறிப்பிட்டுள்ள அவர், அதனால் தான் தனது நண்பர் இறந்ததாகவும் கூறியுள்ளார். எனவே ஈகோ மற்றும் நெகட்டிவிட்டியை தூக்கி எறியுங்கள் என்று சாந்தனு கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் சாந்தனுவின் இந்த பதிவுக்கு ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.