
பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியையும் விஜய் தொடங்கினார். நேற்று விஜய், திரிஷா நடிப்பில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆன கில்லி திரைப்படம் ரீ- ரிலீஸ் ஆனது.
சுமார் 20 வருடங்கள் ஆகியும் கில்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விஜயின் தீவிர ரசிகரான கதிர் என்பவர் திருப்பத்தூரில் வசித்து வருகிறார். இவர் யுனிவர்சல் அச்சீவர் புக் ஆஃப் ரெகார்ட் மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆப் ரெகார்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமையில் ஒரு உலக சாதனையை படைத்துள்ளார்.
என்னவென்றால் கடந்த 16-ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கி 17-ஆம் தேதி இரவு 11 மணி வரை என 36 மணி நேரத்தில் பத்தாயிரம் வரிகளில் ஒரு முழு கவிதையை விஜய்க்காக எழுதி உலக சாதனை படைத்திருக்கிறார். அவருக்கு இரண்டு விருதுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.