கில்லி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய், திரிஷா இல்லையா..? நல்ல வாய்ப்பை மிஸ் பண்ண ஹீரோ, ஹீரோயின் யார் யார்னு தெரியுமா..?

தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த கில்லி திரைப்படம் கடந்த 2004-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். ஆக்சன் காட்சிகள் கலந்த காதல் கதையாக உருவான கில்லி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆனது.

News18 Tamil

   

படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன பிறகும் தற்போது வரை மக்கள் கில்லி படத்தை கொண்டாடி வருகின்றனர். விறுவிறுப்பான கதைக்களம், அதிரடி சண்டை காட்சிகள், மனதை வருடம் காதல், பாடல் காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. கில்லி படத்திற்கு வித்தியாசாகர் இசை அமைத்துள்ளார்.

News18 Tamil

படத்தில் ஒவ்வொரு பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. தெலுங்கு மொழியில் மகேஷ்பாபு நடிப்பில் ஒக்கடு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் கில்லி திரைப்படம். ஒக்கடு திரைப்படத்தை விட கில்லி திரைப்படம் டபுள் மடங்கு வசூலை அள்ளியது. இந்த நிலையில் விஜய், திரிஷாவுக்கு முன் கில்லி படத்தில் நடிக்கவிருந்த நடிகர் நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

News18 Tamil

தரணி ஏற்கனவே இயக்கிய தில், தூள் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இதனால் கில்லி படத்தில் விக்ரமை ஹீரோவாக்கி அவருக்கு ஜோடியாக ஜோதிகாவை ஹீரோயினாக நடிக்க வைக்க தரணி திட்டமிட்டுள்ளார். ஆனால் விக்ரமும் ஜோதிகாவும் வேறுபடத்தில் பிஸியாக இருந்ததால் விஜய்யும், திரிஷாவும் கில்லி படத்தில் நடித்தனர். எதிர்பார்த்தபடி கில்லி படம் சூப்பர் ஹிட் ஆனது.

News18 Tamil