இந்த மாதிரி விளம்பரத்துல விஜய் நடிச்சிருக்காரா..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

முன்னணி நடிகரான விஜய் தனது தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். கடந்த 1996-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பூவே உனக்காக படம் விஜய்க்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.

   

லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், மின்சார கண்ணா, குஷி, பிரியமானவளே, கில்லி, போக்கிரி, நண்பன், பிகில், தெறி, மெர்சல், லியோ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார். படங்களில் பிஸியாக இருந்தாலும் தான் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் விளம்பரங்களிலும் விஜய் நடித்துள்ளார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு கொக்ககோலா விளம்பரத்தில் விஜய் நடித்துள்ளார். மேலும் சன்ஃபீஸ்ட், ஜோஸ் ஆலுக்காஸ், டாடா டொகோமோ ஆகிய விளம்பரங்களிலும் நடித்துள்ளார். டாடா டோகோமோ விளம்பரத்தில் விஜய் நடித்த விளம்பர வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Siva Creations ???? (@thalapathyspot)