விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று’ பாண்டியன் ஸ்டோர்’ இதில் முதல் மருமகளாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா.
தனம் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நடிகை சுஜிதா தனுஷுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது .
இதன் மூலமாக அனைத்து மக்கள் வீட்டிலும் செல்ல மருமகளாக மாறியுள்ளார் சுஜிதா.
சுஜிதா கேரளாவை சார்ந்தவர். இவர் தந்தை மணி இவர் தாயார் ராதா. இவருக்கு ஒரு அண்ணனும் ஒரு தங்கை யும் உள்ளனர்.
இவர் அண்ணன் ஒரு திரைப்பட இயக்குனர் .இவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளாவில் தான்.
இவர் தமிழ் சீனிமாவில் முதலில் 41 நாட்கள் குழந்தையாக பாக்கியராஜ் நடிப்பில் வெளியான ‘முந்தானை முடிச்சு படத்தில்’ குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சுஜிதா.
இவர் சூப்பர் ஸ்டார் உடன் மனிதம், சத்யராஜ் நடித்த ‘பூவிழி வாசலிலே’ வாலி ,இருவர், தியா. பள்ளிக்கூடம் உள்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் பல படங்கள் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு கன்னடம், மலையாளம் ,போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் சின்னத்திரை தொடர்களும் பிற மொழியில் நடித்து வருகிறார் சுஜிதா.
இதன்பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய சின்னத்திரைக்கு திரும்பினார். இவர் சுமார் 30 சீரியலுக்கு மேல் நடித்திருப்பார்.
தற்போது மிக பிரபலமான சின்னத்திரை நடிகையாகவலம் வருகிறார் சுஜிதா.
இதுவரை பல சீரியல்களில் தனது சிறப்பினை நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் நடிகை சுஜிதா அவர்கள்.
சுஜிதா 2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரான தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சுஜிதா – தனுஷ் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இவர் சமீப காலத்தில் ‘கதைகேளு கதைகேளு’ என்ற வலைஒளி சேனலை தொடங்கியுள்ளார். இதில் 592கே சப்ஸ்கிரைப் உள்ளனர்.
பேஸ்புக்கில் சுஜிதா தனுஷ் என்ற பக்கத்தில் 224 k பாலோவர்ஸ் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் சுஜிதா தனுஷ் என்ற பக்கத்தில் 1.2 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர்.
இவர் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.