நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் அப்பாஸை சந்தித்த குஷ்பூ…  நடிகர் அப்பாஸுக்கு இவ்ளோ பெரிய மகனா?… லேட்டஸ்ட் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இவர் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவை பூர்விகமாகக் கொண்டவர். இவருடைய முழு பெயர் மிர்சா அப்பாஸ் அலி.

   

நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தன்னுடைய சிறு வயதிலிருந்தே மாடலிங் துறையில் பணியாற்றியுள்ளார். 1996ல்  வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படம் தான் இவரது சினிமா பயணத்தின் முதல் படி. முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த அப்பாஸ், அதன் பின்னர் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கினார்.

இதை தொடர்ந்து அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானார். பின் இடையில் படங்கள் நடிக்காமல் இருந்த இவர் 2011ம் ஆண்டு தமிழில் கோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து மீண்டும் என்ட்ரீ கொடுத்தார். கடைசியாக பச்சைக்கள்ளம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.

 

இவர் 2001ல் எராம் அலி எனும் பேஷன் டிசைனரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் உள்ளனர். சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் அப்பாஸ்.

இவரை தற்பொழுது நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை குஷ்பூ சந்தித்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகர் அப்பாஸின் மகன் மிகவும் நன்றாக வளர்ந்து காணப்படுகிறார். இதோ அந்த புகைப்படம்…