நடிகை நித்யா மேனன் வீட்டில் நடந்த சோகம்… அவரே வெளியிட்ட புகைப்படம்… ஆறுதல் கூறும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் ‘180’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி ,24, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து  பிரபலமானார். தளபதி விஜயுடன் ‘மெர்சல்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தது, தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த மிகப் பெரிய ரீஎண்ட்ரி என்று அவரே குறிப்பிட்டு இருந்தார்.

   

நடிகர் தனுஷ் உடன் இவர் இணைந்து நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியான ‘wonder woman’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

இதைத்தொடர்ந்து மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் கதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட அயர்ன் லேடி என்ற படத்தில் நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் ‘பீம்லா நாயக்’ படத்தில் பவன் ஜோடியாக நடித்தார். நடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகை நித்யா மேனன் சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

இவர் தற்பொழுது தனது அன்பான பாட்டியின் மரணம் குறித்து இணையத்தில் சோகத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ‘ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன். குட் பை பாட்டி மற்றும் என் செர்ரி மனிதன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்களும் அவருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Nithya Menen (@nithyamenen)