‘ஜெயம்’ பட காமெடி நடிகர் சுமன் ஷெட்டிக்கு இவ்வளவு அழகான மனைவியா?… வெளியான திருமண புகைப்படங்கள்…

தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான “ஜெயம்” திரைப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கி இருந்த நிலையில் ஹீரோவாக நடிகர் ஜெயம் ரவி நடித்திருப்பார்.

   

அதில் ஹீரோயினியாக சதா, கோபி ஷாந்த், ராஜு, பிரகதி, நிழல்கள் ரவி, நளினி மற்றும் செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படத்தில் காமெடி ரோலில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் சுமன் செட்டி.

இவர் அலிபாபா என்ற கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. அதேசமயம் தமிழ் சினிமாவில் சுமன் செட்டி அறிமுகமான முதல் திரைப்படம் இது தான்.

அதன் பிறகு யங் சூப்பர் ஸ்டார், குத்து, 7G ரெயின்போ காலனி, கேடி, சண்டக்கோழி மற்றும் தோரணை என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் அனைத்து திரைப்படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார். இவர் இறுதியாக தமிழில் விளம்பரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் சூரியநதி இயக்கி இருப்பார்.

நடிகர் சுமன் ஷெட்டிதமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரை உலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே இவர் தனது 2009 ஆம் ஆண்டு நாக பவானி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் சுமன் செட்டியின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்து ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு அழகான மனைவியா எனக் கூறி புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.