கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் திருமணம்.. அழகிய ஜோடியின் கியூட் போட்டோஸ் இதோ…!!

அசோக் செல்வன்

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் அசோக் செல்வன், சூது கவ்வும், பீட்சா II, வில்லா, தெகிடி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘போர் தொழில்’ என்ற படம் ப்ளாக் பஸ்டரில் ஹிட்டாகியுள்ளது. மேலும் இதுவரை இவரின் திரை பயணத்தில் வெளிவந்த எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை ‘போர் தொழில்’ படம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் தயாரிப்பாளர் அருண் பாண்டியன் மகளும், வளர்ந்து வரும் பிரபல நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் செப்டம்பர் மாதம், திருமணம் நடைபெற உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம் உறுதி.. திருமண அழைப்பிதழ் புகைப்படம் வைரல்.! - Seithipunal

   
நடிகை கீர்த்தி பாண்டியன்

இவர் நடிகரும் அரசியல்வாதியுமான அருண்பாண்டியனின் மகளும் நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையுமாவார். நடிகை கீர்த்தி 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் தும்பா என்ற சாகசப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது, நாடகங்களிலும் நடித்து வருகிறார்.

கோலிவுட்டில் திருமணத்துக்குத் தயாராகும் அடுத்த நடிகர்: மணப்பெண் யார் தெரியுமா?

அழகிய ஜோடியின் புகைப்படங்கள்

இன்று இவர்களுடைய திருமணம் இரு வீட்டார் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், திருமணத்தில் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி, வைரலாகி வருகிறது. மேலும் இந்த திருமண ஜோடிக்கு ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..

Gallery

Gallery

Gallery

Gallery