மலை கடந்து, கடல் கடந்து ராஜஸ்தான் சென்ற… தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் படக்குழு… வெளியான புகைப்படங்கள்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல். இந்த சீரியல் தினம் தோறும் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

   

இந்த சீரியலின் முதல் சீசன் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் பல சிற்பங்களுடன் முடிவுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக வினோத் பாபு மற்றும் கதாநாயகியாக பவித்ரா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வினோத் பாபு தனது அண்ணி கொலை செய்த குற்றத்தை தான் செய்ததாக ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்கு சென்றார்.

இதனால் அவர் மீது கோபித்துக் கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறிய அபி தற்போது இரண்டாவது சீசனில் கலெக்டராக மாறியுள்ளார்.

முதல் சீசனில் ஜெயிலுக்கு சென்ற வெற்றி வெளியே வந்த பிறகு தனது மனைவி மற்றும் குழந்தையை தேடுகிறார்.

ஆனால் தன்னுடைய குழந்தையை எங்கேயோ கொண்டு சென்று அபியை இனிமேல் ஏற்க மாட்டேன் என்று வீராப்போடு திட்டுகின்றார். அதேசமயம் தற்போது இந்த சீசனில் வெற்றி பழையபடி ரவுடியாக மாறுகின்றார்.

இப்படி இந்த சீசன் பல கட்ட திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக தினந்தோறும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. Star jalsa தொலைக்காட்சியில் ஒளிபரப்பான khelaghor என்ற சீரியலின் ரீமேக்காக தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் தற்போது வரை 600 எபிசோடுகளை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நாம் பார்த்து பழகிய கதை என்றாலும் இந்த தொடர் குழுவினரிடம் ஒரு வித்தியாசம் உள்ளது. அதாவது சீரியலின் கதைக்காக நாம் எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் சென்று பட குழுவினர் அனைவரும் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

அதன்படி முதலில் ஒரு மலை அதன் பிறகு ஒரு நடுக்கடல் என படப்பிடிப்பு நடத்திய இந்தத் தொடர் குழுவினர் ரசிகர்களை வெகுவாக கவர்னர். தற்போது இதற்கெல்லாம் மேலே சென்றுள்ள பட குழுவினர் ரசிகர்கள் எதிர்பாராத ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

அதாவது தற்போது படக்குழுவினர் ராஜஸ்தான் சென்றுள்ளனர். அங்கு பாலைவனத்தில் படப்பிடிப்பு நடத்துகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் பட குழுவினர் அனைவரும் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வரும் பட்சத்தில் சீரியல் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இழந்துள்ளது.