தல அஜித்தின் மனைவி மற்றும் மகனை எதிர்பாராமல் சந்தித்த பாலிவுட் பிரபலம்… வைரலாகும் க்யூட் வீடியோ இதோ….

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தற்பொழுது இவர்கள் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர். நடிகர் அஜித்  ஷாலினிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

   

இறுதியாக நடிகர் அஜித்தின் நடிப்பில் ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித்தின் 62வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஷாலினி தனது மகன் ஆத்விக் உடன் சென்னையின் எப்சி கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்தார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இந்த கால்பந்து போட்டியை ஆர்வத்துடன் நடிகை ஷாலினி பார்த்து ரசித்தார். இந்நிலையில் கால்பந்து  போட்டியை தனது மகனுடன் ஷாலினி அஜித் பார்த்துக் கொண்டிருந்த பொழுது,

சென்னையின் எப்சி அணியின் உரிமையாளர் மற்றும் பாலிவுட் பிரமுகர் அபிஷேக் பச்சன்  திடீரென்று ஷாலினியிடம் வந்து நலம் விசாரித்தார். மேலும் அவரது மகனையும் வாழ்த்தியுள்ளார். தற்பொழுது இந்த கியூட் வீடியோ இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….