
தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ். இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு முதன் முதலாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன், ஆடுகளம்,மாரி,வேலையில்லா பட்டதாரி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
தனுஷ் ஒரு நடிகர் மட்டுமில்லாமல் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டு உள்ளவர்.இவர் நடிப்பில் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக்கி வருகிறது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இவர் தற்பொழுது வரை திரையுலகின் முன்னணி ஹீரோவாகவும், பிஸியாகவும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
நடிகர் தனுஷ் அவர்களின் குடும்பத்தைப் பற்றி பார்க்கும் பொழுது இவருக்கு இயக்குனர் செல்வராகவன் அண்ணன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நடிகர் தனுசுக்கு இரண்டு அக்காக்கள் உள்ளனர். இவருடைய ஒரு அக்காவின் பெயர் விமலா கீதா. மற்றொரு அக்காவின் பெயர் கார்த்திகா தேவி. இருவரும் மருத்துவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
நடிகர் தனுஷின் அக்காவான கார்த்திகா தேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனுஷுக்கும் , தனது மகளுக்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது இப்பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு…
View this post on Instagram