மனைவி மற்றும் மகனுடன் ஜாலியாக அவுட்டிங் சென்ற ‘குட் நைட்’ பட நடிகர்… வெளியான லேட்டஸ்ட் வீடியோ…

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘குட் நைட்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ரமேஷ் திலக். இவர் சூது கவ்வும், வாயை மூடி பேசவும், டிமாண்டி காலனி, ஒரு நாள் கூத்து, காக்கா முட்டை, காலா, டிக் டிக் டிக் என பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

 

   

இவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பு எல்லாம் எனக்கு வராது என்று நினைத்து வானொலித் தொகுப்பாளராக பணிபுரிந்தார். அப்போது அவருக்கு குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க ‘தோட்டா என்ன விலை’ என்ற ஷார்ட் பிலிமில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து சினிமாவிலும் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால் தற்பொழுது வரை அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றார்.இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆர் ஜே நவலெட்சுமியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்க ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் ரமேஷ் திலக். இவர் தற்பொழுது தனது மகன் மற்றும் மனைவியுடன் ஐஸ்கிரீம் சாப்பிட அவுட்டிங் சென்றுள்ளார். இந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்ய ரசிகர்களால் லைக்ஸ்கள் குவிக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Ramesh Thilak (@rameshthilak)