
திவ்ய பாரதி
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த படம் ‘பேச்சிலர்’. இந்த படத்தின் மூலம் பிரபலம் அடைந்து, இந்த படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை திவ்யபாரதி.
இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் மாடலிங் துறையில் இருப்பதால், இன்ஸ்டாவில் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். இவரின் புகைப்படங்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்றும் இன்ஸ்டாகிராமில் மட்டும் 3.2 மில்லியன் ரசிகர்கள் இவருக்கு உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
பேட்டி
சமீபத்தில் இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது, அவரிடம் “முதல் முத்தம் ஞாபகம் இருக்கிறதா? மற்றும் யாருடன்? என்ற கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு திவ்ய பாரதி ‘ஞாபகம் இருக்கிறது என்று பதிலளித்துள்ளார்.
மேலும் 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன் நான் கல்லூரி படிக்கும்போது ஒரு பையனுடன் முத்தமிட்டிருக்கிறேன் எனவும் இப்போது அந்த பையனுடன் நான் டச்சில் இல்லை எனவும் கூறினார். அந்த பையனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்றார். ஆனால் நான் டேட்டிங் செய்தவர்களுடன் எல்லாம் இப்போதும் டச்சில் இருக்கிறேன்’. இவ்வாறு திவ்யபாரதி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.