இந்த சிறுவயது புகைப்படத்தில் கியூட்டாக இருக்கும் முன்னணி பிரபலம் யார் தெரியுமா?… நல்லா உத்து பாருங்க… 

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக கருதப்பட்டவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் வில்லன், ஹீரோ, காமெடியன் என அனைத்து கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமே திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

   

இவர் தமிழில் முதன்முதலாக நடித்த திரைப்படம் ‘பூந்தோட்ட காவல்காரன்’. இவர் திரைக்கதை எழுதிய படங்கள் என்று பார்த்தால் கன்னி ராசி, காக்கி சட்டை, அறுவடை நாள், சுந்தர புருஷன் போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இவர் பல திரைப்படங்களில் குணசித்திர வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நிலைத்திருப்பது கடினம் தான்.

ஆனால் ஒரு சில நடிகர்கள் இன்னும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சத்யராஜ், பிரகாஷ்ராஜ் தொடர்ந்து நடிகர் லிவிங்ஸ்டனும் இன்னும் நடித்துக் கொண்டுதான் வருகிறார். இவர் சமீபத்தில் கூட ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் நடித்து கலக்கினார்.  நடிகர் லிவிங்ஸ்டன் ஜெசிந்தா என்பவரை 1997 ல் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஜோவிதா, ஜென்மா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவரின் மூத்த மகள் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பான ‘பூவே உனக்காக’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தற்பொழுது ‘அருவி’ சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார் இருக்கக்கூடியவர் நடிகை ஜோவிதா.இவர் தற்பொழுது தனது சிறுவயது புகைப்படத்தை வீடியோவாக இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.