பாடகர் யேசுதாஸை கணவருடன் சென்று சந்தித்த பாடகி ஸ்வேதா மோகன்… இதுதான் காரணமா?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…

இந்திய சினிமாவின் பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர். தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று இதுவரையில் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனைப் புரிந்திருக்கும் பிரபல பின்னணி பாடகரான, மத்திய அரசின் தேசிய விருதை 8 முறை பெற்றிருக்கிறார்.

   

இந்திய அரசின் மதிப்புமிக்க விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றவர் யேசுதாஸ். இவரை தற்பொழுது பாடகி சுவேதா மோகன் தனது கணவருடன் சென்று சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார் ஸ்வேதா மோகன். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பணிபுரிந்து வருகிறார். பாடகி ஸ்வேதா மோகன், பிரபல பாடகி சுஜாதாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பாடகி ஸ்வேதா மோகன். இவர் அவ்வப்பொழுது தனது பாடல் வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் பிரபல பாடகரான யேசுதாஸ் அவர்களை சந்தித்த அழகிய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.தற்பொழுது அவரின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அவரின் வைரல் பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Shweta Mohan (@_shwetamohan_)