
நடிகர் லிவிங்ஸ்டன் மகள்
தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர சில படங்களுக்கு திரைக்கதையும் எழுதியும், காமெடி கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் லிவிங்ஸ்டன்.

இவர் முதன்முதலில் கே.பாக்கியராஜ் இயக்கிய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, அதன் பின் 1998ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான’பூந்தோட்ட காவல்காரன்’ படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘வீரா’ படத்திலும் வில்லனாக நடித்தார்.

பின் இவர் 1997ம் ஆண்டு ஜெஸிஸி எனும் ஆசிரியை திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு ஜோவிதா மற்றும் ஜெம்மா என்று இரு மகள்கள் உள்ளனர். அதில் இவரது மூத்த மகள் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பான ‘பூவே உனக்காக’ தொடரின் மூலம் தனது நடிப்பை பயணத்தை தொடங்கி, தற்போது அதே சேனலில் ஒளிபரப்பாகும் ‘அருவி’ என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.


ஜோவிதா, நடிகர் ரஜினிகாந்தின் மிக தீவிர ரசிகைகளுள் ஒருவர். மேலும் இவர் வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் உள்ளார். இவருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர், இணைய பக்கங்களில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் லிவிங்ஸ்டன் மகளா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

