ரம்யா கிருஷ்ணன்
தமிழ் சினிமாவில் 80ஸ்களிலிருந்து தற்போது வரை ரசிகர்களை கவர்ந்து வரும் இவருக்கு தற்போது 52 வயதாகிறது. ஆனால் இன்றும் பார்ப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன் பஞ்சதந்திரம் படத்தில், மேகி ரோலில் நடித்த ரம்யா கிருஷ்ணன் போன்று உள்ளார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவியாக இவர் நடித்துள்ளார். இதனையடுத்து தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகிறது.

இவர் ஒரு பேட்டியில் கூறியதாவது, சினிமாவில் அறிமுகமான காலத்தில், தன்னைவிட 20, 30 வயது அதிகமான ஹீரோக்களுக்கு ஜோடியாக, ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும்போது மிகவும் கூச்ச பட்டதாகவும் ஒரு விதமான அருவருப்பு தன்மையை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன் அப்பா வயது நடிகருடன், ரொமான்ஸ் செய்ய வேண்டுமா என முதலில் யோசித்தேன் என்றும் ஆனால் ஒரு படத்தில் பல்லை கடித்து கொண்டு நடித்தேன் என்றும் கூறினார். பின்னர் அதை ஒரு படமாக பார்க்கும் போது தான், இந்த வயது வித்தியாசம் எல்லாம் பெரிய விஷயமாக தெரியவில்லை என்று அப்போதுதான் முடிவு செய்தேன்.

இந்நிலையில் நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்வதற்கு வயது ஒரு முக்கியம் இல்லை எனவும் படத்தின் கதையும் நம்முடைய திறமையும் தான் முக்கியம் என்று அறிந்து கொண்டேன். பிறகு அடுத்த அடுத்த படங்களில் படத்தின் கதை மட்டும் தான் கேட்டேன் மற்றும் வயது வித்தியாசம் எதுவும் பார்க்காமல் தைரியமாக நடித்தேன் என்றார்.