90’களில் தமிழ் சினிமாவை கலக்கிய மைக் மோகன் இப்ப எப்படி இருக்காரு தெரியுமா?… லேட்டஸ்ட் புகைப்படம்…

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன் என்றும் அழைக்கப்பட்டவர் தான் நடிகர் மோகன். பல தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாக ஒரு காதல் இளவரசன் போல வலம் வந்து கொண்டிருந்தார். இயக்குனர் சுந்தர்ராஜ் இயக்கத்தில் மோகன் நடித்து 1982ல் வெளிவந்த ‘பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி அடைந்தது.

   

இப்படம் நடிகர் மோகன் அவர்களின் திரைப்பயணத்தில் 300 நாட்களைக் கடந்த மூன்றாவது திரைப்படம். இதற்கு முன்பும் மோகன் நடிப்பில் நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள் போன்ற திரைப்படங்கள் 300 நாட்கள் ஓடியது. ஹீரோவாக அறிமுகமாகிய முதல் மூன்று வருடங்களிலும் 300 நாட்கள் ஓடி சாதனை படைத்த மூன்று படங்களை கொடுத்த ஒரே ஹீரோ நடிகர் மோகன் மட்டுமே.

இவருக்கு ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்துக்காக ‘சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும்  வழங்கப்பட்டது. இப்படி வெற்றி படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்த இவரது திரை வாழ்க்கையின் இடையில் சில வதந்திகள் மற்றும் பிரச்சனைகளில் சிக்கியதால் இவரது சினிமா பயணம் அப்படியே முடிந்தது. பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் மோகன் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் தற்பொழுது ‘ஹரா ‘ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகை வனிதா விஜயகுமாரும் அவருடன் இணைந்து நடிக்கிறார். தற்பொழுது நடிகை வனிதா விஜயகுமார் நடிகர் மோகனுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அவரின் புகைப்படம்….