‘ஹுசைன் என்ன முஸ்லிமா convert பண்ணிட்டாரா?’… பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மணிமேகலை…

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே மணிமேகலை. தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் இவர் விலகினார். அந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இவரின் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

   

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தங்களின் சொந்த நிலத்தில் வீடு கட்டும் வேலையில் மணிமேகலையும் அவரின் கணவரும் பிசியாக உள்ளனர். இருந்தாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மணிமேகலை அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அந்தவகையில் சமீபத்தில் இவர் அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. சமீபகாலமாகவே இணையத்தில் மணிமேகலை மதம் மாறிவிட்டதாக நெட்டிசன்களால் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தது. தற்போது இந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தற்போது மணிமேகலை கலாட்டா சேனலின் மூலம் நடிகை ஷகிலா எடுத்த பேட்டியில் கலந்து கொண்டு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘ தனக்கு எம்மதமும் சம்மதம் என்றும், இப்பொழுதும் ஹிந்துவாக தான் இருப்பதாகவும்’ கூறியுள்ளார். இதோ அவரின் வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)