
நடிகர் நெப்போலியன் 90-களில் கதாநாயகனாக நடித்து, தற்போது குணசித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். எனினும், சமீப காலமாக அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் பேட்டி ஒன்றில் அவர் கேப்டன் விஜயகாந்த் குறித்து தெரிவித்திருப்பதாவது, நிச்சயம் அவரின் வளர்ச்சி என்பது மிகப்பெரியது.
மிகப்பெரிய தலைவராவதற்கு தகுதி உள்ள ஒரு நபர். நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்த போது, அனைவரும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டோம். ஏனெனில், 1991 ஆம் வருடத்தில் நான் நடித்த முதல் திரைப்படம் வெளியானது. அப்போது விஜயகாந்த் அவர்களின் நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன் வெளியானது.
என் முதல் படம் வெளியாகும் போதே அவர் 100 திரைப்படங்களில் நடித்துவிட்டார். எனக்கு அவர் பெரிய சீனியர். அந்த மரியாதையோடு எப்போதும் அவரின் தலைமையை ஏற்றுக் கொண்டோம். ஆனால், கட்சி ரீதியாக பார்த்தால் நான் திமுகவில் இருந்தேன். அவர் தனியாக கட்சி ஆரம்பித்து விட்டார்.
அப்போது சிறிதாக எங்களுக்குள் மன வருத்தம் ஏற்பட்டது. எனினும், நாங்கள் பார்த்தால் பேசிக் கொள்வோம். அவரின் கட்சி கொள்கை வேறு. நம் கட்சி கொள்கை வேறு. அதன் பிறகு நடிகர் சங்கத்திலிருந்து வெளியேறி விட்டோம். அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட தொடங்கி விட்டோம். அதனால் முன்பிருந்தது போல் தொடர்பு குறைந்து விட்டது.
எனினும், அவர் உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூருக்கு சென்று விட்டு வந்த போது அவரை நேரில் சென்று பார்த்தேன் என்று கூறியிருக்கிறார்.