படப்பிடிப்பில் வழிந்த இரத்தம்… அஜித்துக்கு கோபம் வந்தா.. என்ன செய்வார் தெரியுமா…? பிரபல வில்லன் நடிகர் பேட்டி…!

நகைச்சுவை நடிகரான சக்திவேல், ஸ்டண்ட் கலைஞர் ஆவார். அவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்த மண்டபத்திரம் என்ற காமெடி மிகவும் பிரபலம். தற்போது வரை, மீம்ஸ்கள் மற்றும் ரீல்ஸ்களில் அவரின் காமெடி டிரெண்டில் இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்குமார் குறித்து பேசி இருக்கிறார்.

அவர் தெரிவித்ததாவது, நடிகர் அஜித்துடன் பழைய திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறேன். அவர் ரிஸ்க் எடுத்து நடிக்கக் கூடியவர். நானும் அதிக ரிஸ்க் எடுத்து நடிப்பேன். அப்போது எனக்கு கை கால்களில் எல்லாம் ரத்தம் வந்துவிட்டது. அஜித் எப்போதுமே நல்ல உதவியாக இருப்பார்.

   

நல்ல மனிதர். எப்போதும் அமைதியாக தான் இருப்பார். சத்தமாக கூட பேச மாட்டார். திரைப்படங்களில் அத்தனை பேரை போட்டு அடிப்பதை, சண்டையிடுவதை பார்த்திருப்போம்.  நேரில் பார்த்தால் மிகவும் சாந்தமான மனிதர். கோபமே வராது. எப்போதாவது கோபம் வந்தாலும் எதுவும் பேசாமல் சென்று விடுவார். அதிகபட்சமாக கோபம் வரும்போது, முறைத்து பார்ப்பார் அவ்வளவுதான். அப்படி இருப்பது மிகவும் நல்லது என்று கூறியிருக்கிறார்.