நடிகை பிரியா பவானி ஷங்கரா இது… வர வர கிளாமரில் அசத்தும் நடிகையின் போட்டோஷூட் இதோ…!!

ப்ரியா பவானி ஷங்கர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் ப்ரியா பவானி ஷங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தார். பின்  சினிமாவில் மேயாத மான் (2017) என்ற படத்தின் மூலம் என்ட்ரீ கொடுத்தார்.

   

பின்னர் இவர் கடைக்குட்டி சிங்கம் (2018), மான்ஸ்டர் (2019), மாஃபியா: அத்தியாயம் 1 , யானை (2022), திருச்சிற்றம்பலம் (2022) மற்றும் பத்து தலை (2023) போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார்.

இவரது படங்கள் ஹிட்டான நிலையில் தொடர்ந்து ப்ரியா , 20 படங்களுக்கு மேல் தமிழில் நடித்துவிட்டார். இறுதியாக இவரது நடிப்பில் பொம்மை என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

 லேட்டஸ்ட் புகைப்படம்

நடிகை பிரியா பவானி ஷங்கர் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.