அந்த பழக்கத்தால் என் நிம்மதி.. வாழ்க்கையே போச்சு.. பிக்பாஸ் தாமரை மனவேதனை…!!

பிக்பாஸ் தாமரை

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5இல் பங்கேற்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் தாமரை. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர், ஒரு நாடகக்கலைஞராக இருந்துள்ளார்.

   

இவர் பிக்பாஸ் வீட்டில் 1 வாரம் கூட தாக்குப்பிடிக்க மாட்டார் என்று நினைத்த நிலையில், ஆனால் அதிரடியாக 90 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் வீட்டில்  இருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சில சீரியல்களில் தற்போது இவர் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும், பொம்மி சீரியலிலும் நடித்து வரும் இவர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது மதுவால் தான் நான் என் வாழ்க்கையை இழந்தேன் என்றும்  கூறினார்.

பேட்டி

தாமரைக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் நடந்த நிலையில், அவருக்கு ஒரு மகனும் உள்ளார். ஆனால் முதல் கணவர் தினமும் குடித்துவிட்டு, சண்டை போடுவதால் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதனையடுத்து மறுமணம் செய்து, தற்போது 12 ஆண்டுகள் ஆகிய நிலையில் தன் கணவர் தன்னை விருப்பத்தோடு தான் திருமணம் செய்தார் என்றார். மேலும் இதுவரைக்கும் நல்ல முறையில் கவனித்து வருகிறார் என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் கணவரின் குடி பழக்கத்தினால், நிறைய பெண்கள் துன்பம் அனுபவித்து வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் தற்போது சின்ன , சின்ன பசங்க கூட, மது இல்லாமல் இருப்பதில்லை.

அதனால் பெண்கள் ரொம்ப பாவம் மற்றும் அவர்களின் சிரமம், ஆண்களுக்கு தெரிவதில்லை. மது அருந்திவிட்டு பெண்களை சிரமப்படுத்த கூடாது.” இவ்வாறு தாமரை பேசியுள்ளார்.