மாலத்தீவு கடற்கரையில் சில் செய்யும் நடிகர் ரஜினிகாந்த்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த வாரம் வெளியான நிலையில், செகண்ட் சிங்கிள் வரும் 17ம் தேதி ரிலீஸாகிறது.

   

இன்னொரு பக்கம் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விதார்த் இருவரும் லீடிங் ரோலில் நடிக்க, சூப்பர் ஸ்டார் மொய்தீன் பாய் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். இது கேமியோ ரோல் தான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் லால் சலாம் படப்பிடிப்பு இருதினங்களுக்கு முன்னர் நிறைவுப் பெற்றது. இதனை ரஜினி, ஐஸ்வர்யா உட்பட லால் சலாம் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். ஒருபக்கம் ஜெயிலர் ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் லால் சலாம் போஸ்ட் புரொடக்‌ஷனை தொடங்கிவிட்டார் ஐஸ்வர்யா.

லால் சலாம் படத்திற்கான டப்பிங் கொடுத்து முடித்ததும், ‘தலைவர் 170’ படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. அதற்கு முன்பாக ஜாலியாக மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார் சூப்பர் ஸ்டார். தற்பொழுது மாலத்தீவிற்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் கடற்கரையில் சில் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…