
நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ரஜினிகாந்த் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வெள்ளையில் இருக்கும் எந்த உணவு வகைகளும் பிடிக்காது. அதாவது, சாதம், தயிர், மோர், பால் ஆகியவற்றை சாப்பிட மாட்டார்.
மேலும் மது அருந்தும் போதும் எந்த வகையான அசைவ உணவுகளையும் எடுத்துக் கொள்ள மாட்டார். ஒருமுறை ரஜினிகாந்த் தன் திருமண அறிவிப்பை வெளியிடுவதற்காக பத்திரிகையாளர்களை தன் வீட்டிற்கு அழைத்திருக்கிறார். அப்போது பயில்வான் ரங்கநாதனும் உடன் சென்றிருக்கிறார்.
அனைவருக்கும் மது விருந்து வைத்த அவர் சைடிஸ் எதையும் வைக்கவில்லையாம். அவரிடம் ஏன் என்று? கேட்டபோது, இது ரஜினி ஸ்டைல். மது அருந்தும் போது எந்தவித தொடு உணவுகளையும் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு மற்றவர்களுக்கு மட்டும் சைடிஸ் வர வைத்து கொடுத்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.