விவாகரத்தான நடிகருடன் 2-வது முறையாக இணையும் சாய் பல்லவி… குஷியில் நடிகை… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!

சாய் பல்லவி

மலையாள திரையுலகம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகை சாய் பல்லவி, தமிழ் நாட்டை சேர்ந்தவர். இவருக்கு தென்னிந்திய அளவில் புகழ் கிடைக்க முக்கிய காரணமாக இருந்த படம் பிரேமம் படம் தான்.

   

இதன் பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்த இவர், தமிழில் தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார். மேலும்  மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, தற்போது தமிழில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 21வது படத்தில்   நடித்து வருகிறார்.

இரண்டாவது முறையாக கூட்டணி

இந்நிலையில் சாய்பல்லவி தற்போது கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கும் நடிகர் நாகசைதன்யாவின் 23வது படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு அட்வான்ஸ் தொகையையும் தயாரிப்பாளரிடம் பெற்று கொண்ட போட்டோவையும் இணையத்தில் பகிர்ந்தார்.

இவர்கள் இருவரும் தெலுங்கில் வெளிவந்த லவ் ஸ்டோரி எனும் படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், மீண்டும் அவருக்கு ஜோடியாக இரண்டாவது முறையாக  நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.