இந்த புகைப்படத்தில் கியூட்டாக சிரித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா?…  தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க….

சமீப காலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது முன்னணி சீரியல் நடிகர்களில் ஒருவரான நடிகர் சஞ்சீவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இந்த சீரியலில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சஞ்சீவ்.

   

இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார் இத்தொடரில் ஹீரோயினாக களமிறங்கியவர் நடிகை ஆலியா மானசா. இவர்கள் இருவரும் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு தற்பொழுது ஐலா, அர்ஷ்  என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ராஜா ராணி சீசன் 1 வெற்றியை தொடர்ந்த ராஜா ராணி 2 தொடர் எடுக்கப்பட்டது. இத்தொடரிலும் ஹீரோயினாக நடிகை ஆலியா மானசாவே நடித்து வந்து கொண்டிருந்தார். இரண்டாவது குழந்தை கர்ப்பமாக அந்த சீரியலை விட்டு விலகிய இவர், தற்பொழுது குழந்தை பிறந்து பத்து மாதங்களுக்கு மேல் ஆவதால் சின்னத்திரையில் மீண்டும் அதிரடியாக களமிறங்கியுள்ளார்.

இவர் தற்பொழுது தனது உடல் எடையை வெகுவாக குறைத்து பழைய லுக்கிற்குத்  திரும்பி பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். ஆனால் விஜய் டிவியில் அல்ல, சன் தொலைக்காட்சியில். ஆம் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இனியா’ சீரியலில் கதாநாயகியாக களமிறங்கி அசத்தி வருகிறார்.

இந்த சீரியல் தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல சஞ்சீவும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். இருவரும் தங்களது படபிடிப்பு வேலைகளில் தற்பொழுது பிசியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சஞ்சீவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகிவரு வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….