நடிகை சாய் பல்லவியின் தங்கையா இவர்?… அப்புடியே அக்காவைப் போல இவ்ளோ அழகா இருக்காங்களே…

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் சாய் பல்லவி. பிரேமம் என்ற ஒரே படத்தில் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார் சாய் பல்லவி. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரபலமானார் சாய் பல்லவி.

   

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற சாய் பல்லவி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார் சாய் பல்லவி. அதன்பின்னர் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துவருகிறார்.

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் கதாநாயகியாக நடித்தார் சாய் பல்லவி. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் விராத பர்வம் மற்றும் கார்க்கி திரைப்படம் ரிலீஸாகி மக்களிடையே வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது பல திரைப்படங்களை கைவசம் வைத்து பிசியாக நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சாய் பல்லவி. இவருக்கு ஒரு தங்கையும் உள்ளார். அவரின் பெயர் பூஜா கண்ணன். இவரும் தற்பொழுது நடிகையாக களமிறங்கி கலக்கி வருகிறார். இந்நிலையில் பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அக்கா சாய் பலவியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.