‘வாரிசு’ பட நடிகர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சரத்குமார்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் ஜனவரி 11ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீசான திரைப்படம்’ வாரிசு’. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார்.

   

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு மற்றும் பலர் நடித்து இருந்தனர். மேலும் இப்படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார்.தற்பொழுது பல நூறு கோடி வசூலை கடந்து சாதனைப் படைத்து வருகிறது வாரிசு திரைப்படம். இந்நிலையில் வாரிசு படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக எடுக்கப்பட்டதால் குடும்ப ஆடியன்ஸை பெருமளவில் கவர்ந்தது.

இத்திரைப்படத்தில் விஜயின் அப்பாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் சரத்குமார். சமீபத்தில் நடிகர் சரத்குமார் தனது பிறந்த நாளை குடும்பத்தோடு இணைந்து கொண்டாடியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் மனைவியான நடிகை ராதிகா இணையத்தில் பதிவு செய்ய அந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் சரத்குமார் வாரிசு திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்களுடன் இணைந்து தனது பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியோடு கொண்டாடி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.