ஒரு சீரியல் டப்பிங்கிற்கு இவ்ளோ கடின உழைப்பு தேவையா?… தண்ணீரில் மூழ்கி டப்பிங் செய்த பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமார்… வைரலாகும் வீடியோ…

சின்னத்திரை சீரியல்களில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர்  ஸ்ரீகுமார்.இவர்  இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்களின் மகன் ஆவார் . விஜய் டிவியில்  ஒளிபரப்பான ‘காவியாஞ்சலி’ நாடகம் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானர் . இதைத்  தொடர்ந்து இவர் ஆனந்தம், மலர்கள், சிவசக்தி, யாரடி நீ மோகினி  என்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் .

   

சின்னா  என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரை உலகில் அறிமுகம் ஆனார் . இந்த  படத்தை தொடர்ந்து  தெறி, பம்பரக்கண்ணாலே, ரங்கூன் , ஆர்கே நகர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார் .

சன் டிவியில்  ஒளிபரப்பாகும் ‘வானத்தை போல’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் சமிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளை உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர்  ஸ்ரீகுமார் அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருவார் .

அந்த வகையில் தற்பொழுது நடிகர் ஸ்ரீகுமார் தன் நடித்து வரும் சீரியல் ஒன்றுக்கு டப்பிங் செய்யும் வீடியோ ஒன்றை தனது instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் தண்ணீரை வைத்துக்கொண்டு அதில் மூழ்கியவடி தத்ரூபமாக டப்பிங் செய்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘ டப்பிங் இவ்வளவு கஷ்டமா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவரின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Sreekumar Ganesh (@sreekumar.ganesh)