விரைவில் வெளியாகும் நடிகர் சசிகுமாரின் ‘நந்தன்’ திரைப்படம்… இயக்குனர் இரா. சரவணனின் சூப்பர் அப்டேட்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சசிகுமார். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளோடு திரையுலகில் வலம் வந்து கொண்டுள்ளார். இவர் தற்பொழுது ஹீரோவாக  ‘நந்தன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகி வைரலானது.

   

‘கத்துக்குட்டி’ , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக்பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் பற்றி இயக்குனர் இரா.சரவணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, ‘எப்போதான் நந்தன் படத்தைக் கண்ணுல காட்டுவீங்க?’ என்கிறார் சசிகுமார் சார். படக்குழு தொடங்கி ஆத்மார்த்தமான அத்தனை உள்ளங்களின் கேள்வியும் இதுதான். மிக விரைவில் ‘நந்தன்’ வெளியீடு குறித்த விவரம்’ என்று கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளார் இயக்குனர். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Era.Saravanan (@erasaravanan)