மறைந்த நடிகர் மற்றும் மருத்துவரான சேதுராமனின் மகளா இது?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்தான் சேதுராமன். இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர். வாலிப ராஜா மற்றும் சக்க போடு போடு ராஜா என இதுவரை நான்கு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தோல் நோய் மருத்துவரான இவர் சென்னையில் தனியாக ஒரு கிளினிக் நடத்தி வந்தார்.

   

இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு இவருக்கும் உமையாளுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே இளம் வயதில் மருத்துவம் படித்த இவர் கடந்த வருடம் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் உயிரிழந்த போது அவரின் மனைவி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார்.

சேதுராமனின் மறைவிற்குப் பிறகு அவரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்காக வாழ்ந்து வருவதாக பலமுறை அவரின் மனைவி தெரிவித்துள்ளார். இந்நிலையில் சேதுராமன் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Uma (@uma.sethuraman)