தமிழ் திரையுலகிற்கு புதிய நடிகை கிடைச்சாச்சு…. வைரலாகும் தளபதி மகளின் புகைப்படங்கள்…!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி கூறவே வேண்டியதில்லை. அந்த அளவிற்கு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

   

அவரின் திரைப்படங்கள் வெளிவந்தாலே திருவிழாக்கள் போல் கொண்டாடுவார்கள். மேலும், அவரின் புகைப்படங்களோ அவரின் குடும்பத்தினரின் புகைப்படங்களோ வெளிவந்தால், உடனே அவை வைரலாகி விடும். அந்த வகையில், சமீபத்தில் அவரின் மகன் ஜேசன் சஞ்சய் படிப்பை முடித்துவிட்டு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார் என்ற தகவல் பரவி வந்தது.

அவரின் மகளான திவ்யா ஷாஷாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.