நெருங்கிய நண்பர்களை நேரில் சந்தித்த பார்த்திபன் முன்னாள் மனைவி சீதா… வெளியான அழகிய புகைப்படங்கள்..

தென்னிந்திய சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை சீதா. இவர் நடித்த ஆண்பாவம், குரு சிஷ்யன் மற்றும் ராஜநடை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

80களில் மிகவும் பிசியான நடிகையாக திகழ்ந்த இவர் படங்களில் நேரம் ஒதுக்க முடியாத நிலையால் பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

ஆண்பாவம் திரைப்படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கிய புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடித்த சீதா காதல் வயப்பட்டு கடந்த 1989 ஆம் ஆண்டு பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர். பத்து வருடங்கள் சினிமாவில் பிரேக் எடுத்த சீதா அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு மீண்டும் நடிக்க தொடங்கினார்.

ஆனால் வயதாகி விட்டதால் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இப்படியான நிலையில் 2010 ஆம் ஆண்டு சதீஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

தற்போது இவர் தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நெருங்கிய நண்பர்களான திரை பிரபலங்கள் பலரையும் நேரில் சந்தித்துள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Seetha PS (@seethaps67)