நடிகர் விஜய் விவாகரத்து…. த்ரிஷாவுடன் திருமணம்…. வதந்திக்கு  பதிலடி கொடுத்த நடிகை திரிஷா….

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை திரிஷா இவர் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ படத்தில்  நடித்துள்ளார்.  கடந்த இரண்டு நாட்களில் நடிகை திரிஷாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வந்தது. 35 வயதை தாண்டிய நடிகை திரிஷாவிற்கு எப்போது திருமணம் நடக்கும் என்று சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

   

ஏற்கனவே பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவர் உடன் திருமணம் நிச்சயம் செய்து கொண்டார் திரிஷா. ஆனால், அந்த திருமணம் நடைபெறாமல் நிச்சயதார்த்தத்தோடு நின்று போனது.இந்நிலையில் திரிஷா வீட்டில் விரைவில் கெட்டிமேல சத்தம் கேட்க இருக்கிறது என்று தகவல்கள் மறுபக்கம் நடிகர் விஜயுடன் தொடர்பில் இருக்கிறார் நடிகை திரிஷா என்றும் அவருடைய வீட்டிற்கு திரிஷாவை அழைத்துச் சென்றார் நடிகர் விஜய்.

பதறிப்போன அவருடைய மனைவி சங்கீதா நடிகர் விஜய் இடம் கடுமையாக சண்டை போட்டதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. இது என்னடா வம்பா போச்சு..?!? என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்க இவை அனைத்திற்கும் ஒரே பதிவில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை திரிஷா.அவர் கூறியதாவது, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். அமைதியாக இருங்கள் வதந்தியை பரப்புவதை நிறுத்துங்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.